Published on 31/07/2019 | Edited on 31/07/2019
டிஜிட்டல் இந்தியாவின் வளர்ச்சி தற்போது சிறுவர் முதல் பெரியோர்கள் வரை அனைவரிடமும் செல்போன் இல்லாத நிலையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இந்த செல்போன்களால் தேவையற்ற வதந்திகள் பரவுவது மட்டுமல்லாமல் பாலியல் ரீதியிலான வன்முறைகளும் அதிகரித்து வருகின்றன.
இந்தநிலையில், செல்போன் பயன்படுத்தும் சிறார்களில் குறிப்பாக டீனேஜ் வயதினர்கள் சுமார் 92 சதவிகிதம் பேர் ஆபாச வீடியோக்கள், படங்களையே அதிகம் பார்ப்பதாக ஆய்வு முடிவுகள் வந்திருப்பதாக யுனிசெப் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. இது பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.