Skip to main content

துருக்கி நிலநடுக்கம் -பலி எண்ணிக்கை உயர்வு!

Published on 02/11/2020 | Edited on 02/11/2020
ரகத

 

 

துருக்கி கடல் பகுதியில் நேற்று முன்தினம் மாலை நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து சுனாமி ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இது ஏழாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தின் காரணமாக துருக்கியின் பல பகுதியில் கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. குறிப்பாக போர்னோவா, பைராக்சி ஆகிய நகரங்களிலும் ஏராளமான கட்டிடங்கள் நிலநடுக்கத்தால் சேதம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

நிலநடுக்கத்தால் சேதம் அடைந்துள்ள கட்டிட இடிபாடுகளுக்குள் அதிகமானோர் சிக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியான நிலையில், இதுவரை 70 பேர் பலியாகியுள்ளதாகவும், 960க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கட்டிட ஈடுபாடுகளில் இன்னும் ஏராளமானோர் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்ற அச்சம் நிலவும் சூழலில், வீடுகளை இழந்த ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்