அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் மகன் டொனால்ட் ஜான், ட்ரம்ப்பின் காதலி கிம்பர்லிக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து அவர் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் மூத்த மகன் டொனால்ட் ட்ரம்ப் ஜூனியரின் காதலி கிம்பர்லி கில்ஃபோயில், அதிபர் ட்ரம்ப்பின் கூட்டத்தில் பங்கேற்பதற்காகவும், ரஷ்மோர் மவுண்டில் நடைபெறும் பட்டாசு கொண்டாட்டத்தைப் பார்வையிடவும் தெற்கு டகோட்டாவுக்குச் சென்றுள்ளார். 51 வயதான கில்ஃபோயில், ஜனாதிபதியுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர் என்பதால், அங்கு சென்ற அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அறிகுறிகள் ஏதும் தென்படாத நிலையில், சோதனை முடிவுகளில் அவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு, அவருக்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக ட்ரம்ப் பிரச்சார நிதிக்குழு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ’’கிம்பர்லி நலமாக உள்ளார். பரிசோதனையில் டொனால்ட் ட்ரம்ப் ஜூனியருக்குக் கரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவர் கலந்துகொள்வதாக இருந்த அனைத்து பொது நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.