Skip to main content

75 அடி நீளமுள்ள பாலம் காணவில்லை..அதிர்ச்சியில் ரஷ்யா!

Published on 08/06/2019 | Edited on 08/06/2019

ரஷியாவில் 56 டன் எடை கொண்ட 75 அடி நீளம் உள்ள ரெயில்வே பாலம் காணாமல் போயிருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. அந்நாட்டின் முர்மன்ஸ்க் பகுதியில் உம்பா நதியின் மேல் அமைந்துள்ள இந்த ரெயில்வே பாலம் கடந்த 2007-ம் ஆண்டு முதல் பயன்படுத்தப்படாமல் இருந்து வந்துள்ளது. அடர்ந்த வனப்பகுதிக்கு மத்தியில் அமைந்திருப்பதால், இங்கு மக்கள் நடமாட்டம் பெரிய அளவில் இருக்காது என கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த மே மாதம் இந்த பாலம் மாயமாக மறைந்ததாக அந்நாட்டின் சமூக வலைத்தளம் ஒன்றில் தகவல் பரவியது. பாலம் கீழே விழுந்து உடைந்திருந்தால் அதன் இடிபாடுகள் இருக்க வேண்டும், ஆனால் சுத்தமாக பாலமே காணோம் என்பதுதான் தற்போது, அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறது. 

 

 

bridge

 

 


உலோகத் திருடர்களால் இந்தப் பாலம் திருடப்பட்டிருக்கலாம் என்று உள்ளூர் வாசிகள் கூறி வருகின்றனர். இதற்கிடையில், ரெயில்வே பாலம் காணாமல் போனது தொடர்பாக குற்ற வழக்கு பதிவு செய்து, போலீசார் விசாரணையை முடுக்கிவிடப்பட்டுள்ளது. உலோக பாகங்களை விற்பதற்காக மர்ம கும்பல் பாலத்தை உடைத்து திருடியிருக்கலாம் என கூறப்பட்டாலும், இவ்வளவு பெரிய பாலத்தை அந்த கும்பல் எப்படி திருடி கொண்டு சென்றிருக்க முடியும் என்பது புரியாத புதிராகவே இருப்பதால், விசாரணையில் சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்