உலகநாடுகள் பங்குபெறும் ஐக்கிய நாடுகள் அவையின் 74வது பொதுக்கூட்டத்தில் நடைபெற்ற பருவநிலை தொடர்பான உச்சி மாநாட்டில் பேசிய கிரேட்டா என்ற சிறுமியின் பேச்சு பலரது பாராட்டுகளையும் பெற்றது.
ஸ்வீடன் நாட்டை சேர்ந்த 16 வயதான சுற்றுசூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் சுற்றுசூழல் சீர்கேட்டிற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளாத உலக தலைவர்களை கடுமையாக சாடினார். மேலும் இந்த கூட்டத்தின் நடுவே டிரம்ப் அங்கு வந்த போது கிரேட்டா, டிரம்ப்பை கோபத்துடன் பார்த்த வீடியோவும் இணையத்தில் வைரலானது.
இந்த நிலையில் கிரேட்டா தன்பெர்க் பேசிய வீடியோவை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ட்விட்டரில் பகிர்ந்து, “இந்த சிறுமி மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். பார்ப்பதற்கு அருமையாக உள்ளது. இவருக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது” என விமர்சித்து பதிவிட்டார். இதற்கு பல தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்புகள் எழுந்தன.
இந்த நிலையில் ட்ரம்பின் பதிவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கிரேட்டா தன்பெர்க், தனது ட்விட்டர் பக்கத்தில் உள்ள சுயவிவரத்தை மாற்றியுள்ளார். அதில் அவர் “நான் மகிழ்ச்சியான இளம்பெண். நல்ல எதிர்காலத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் பெண்” என குறிப்பிட்டுள்ளார். டிரம்ப் மற்றும் கிரேட்டா இடையேயான இந்த ட்விட்டர் சண்டை பலரையும் வியப்படைய வைத்துள்ளது.