Skip to main content

திகைத்து நின்ற ட்ரம்ப்புக்கு ஐடியா கொடுத்த இந்தியா...

Published on 13/03/2020 | Edited on 13/03/2020

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அயர்லாந்து பிரதமருடனான சந்திப்பின் போது, கை குலுக்குவதைத் தவிர்த்து, அதற்குப் பதிலாக இந்திய முறைப்படி வணக்கம் தெரிவித்தார்.

 

trump about saying namaste to ireland pm

 

 

உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கரோனா தற்போது சுமார் 100 நாடுகளில் பரவியுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு நாடுகளின் அரசியல் தலைவர்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா பரவல் காரணமாக உலக நாடுகளில் கைகொடுத்து வரவேற்கும் பழக்கம் பெரும்பாலும் தவிர்க்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அயர்லாந்து பிரதமருடனான சந்திப்பின் போது, கை குலுக்குவதைத் தவிர்த்து, அதற்குப் பதிலாக இந்திய முறைப்படி வணக்கம் தெரிவித்தார்.

பின்னர் இதுகுறித்து பேசிய ட்ரம்ப், "கை குலுக்காமல் என்ன செய்வதென்று தெரியாமல் நான் திகைத்தேன். ஆனால், அண்மையில் நான் இந்தியா சென்று வந்தபோது, அங்கே அனைவரும் கைகளைக் கூப்பி வணக்கம் தெரிவித்தனர். அந்த முறை மிகவும் எளிமையாக இருந்ததால் இந்தியாவிலிருந்து வந்த பிறகு தற்போது கை குலுக்காமல் வணக்கம் தெரிவித்து வருகிறேன்" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்