Published on 10/03/2025 | Edited on 10/03/2025

இரு குழுவினர் மாறி மாறி தடியால் அடித்துக் கொள்ளும் காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள சாரங்கப்பூர் கிராமத்தில் நீர் வடிகால் தொடர்பாக பிரச்சனை இருந்துள்ளது. இதில், ஒரு பகுதி மட்டும் சுத்தமாக இருந்துள்ளது. இதனால், இரு குழுவினரிடையே பிரச்சனை எழுந்துள்ளது.
இந்த பிரச்சனை ஒரு கட்டத்தில் மோதலாக மாறி, இளைஞர்கள், பெண்கள் உள்பட 10க்கும் மேற்பட்டவர்கள் மாறி மாறி தடியால் அடித்துக் கொள்கின்றனர். சிலர், இந்த மோதலை நிறுத்த முயற்சிக்கின்றனர். ஆனாலும், தொடர்ந்து தடியால் அடித்து மோதலில் ஈடுபட்டனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.