உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் தீவிரத் தாக்குதலை நடத்தி வரும் நிலையில் சாலையில் குண்டுமழை பொழியும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவையும், அது கைப்பற்றிய கிரிமியா பகுதியையும் இணைக்கும் மிக முக்கிய பாலம் வெடி வைத்து தகர்க்கப்பட்டது. இதன் பின்னணியில் உக்ரைன் உள்ளதாக ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது. இதற்கு பதிலடி தரும் விதமாக, உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இதில், 14 பேர் கொல்லப்பட்ட நிலையில் பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்நிலையில் உக்ரைனின் டினிப்ரோ நகர் பகுதியில் சாலையில் குண்டு மழைகள் பொழிய வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் அச்சத்தில் தப்பியோடும் காட்சிகள் வெளியாகியுள்ளது. அந்த காட்சியில் சாலையில் குண்டு வீசப்படுவதை முன்னரே அறிந்த வாகன ஓட்டிகள் காரை நிறுத்திட்டு ஓட்டம் பிடித்தனர். இதனால் வானில் கரும்புகை சூழ்ந்தது. இந்த காட்சிகள் கார் ஒன்றிலிருந்த கேமராவில் பதிவான நிலையில் அவை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.