Skip to main content

“முத்துவேல் பாண்டியனின் வேட்டை” - வெளியான ஜெயிலர் 2 அப்டேட்

Published on 10/03/2025 | Edited on 10/03/2025
jailer 2 update

ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் உருவாகுவதாக கடந்த பொங்கலன்று அறிவிப்பு டீசருடன் படக்குழு தெரிவித்தது. இப்படத்தையும் முதல் பாகத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்க நெல்சன் இயக்கத்தில் அனிருத்தே இசையமைக்கிறார். 

இப்படத்தில் இருந்து மற்ற நடிகர் நடிகைகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளிவரவில்லை. இருப்பினும் இப்படத்தில் தெலுங்கு மூத்த நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பதாக தகவல் வெளியானது. பின்பு கே.ஜி.எஃப். நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி இணைந்துள்ளதாக சமீபத்தில் கூறப்பட்டது. 

இந்த நிலையில் இப்படத்தில் இருந்து ஒரு அப்டேட் வெளியாகியுள்ளது. படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தங்களது எக்ஸ் பக்கத்தில் ஒரு போஸ்டரை வெளியிட்டுத் தெரிவித்துள்ளது. மேலும் ரஜினி நடிக்கும் கதாபத்திரமான முத்துவேல் பாண்டியனின் பெயரைக் குறிப்பிட்டு “முத்துவேல் பாண்டியனின் வேட்டை தொடங்கியது” எனக் குறிப்பிட்டுள்ளது. இதே நிறுவனத்துடன் ரஜினி தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்