உணவுக்காக விற்கப்படும் மீன்கள் பார்ப்பதற்கு ஃபிரெஷ்ஷாக தெரிய வேண்டும் என்பதற்காக விற்பனைக்கு வரும் அழுகிய மீன்களுக்கு ''கூகுளி ஐ'' எனப்படும் போலி கண்கள் பொருத்தப்பட்டு மீன் விற்பனை செய்தது பெரும் அதிர்ச்சியை கிளப்ப அந்த கடைக்கு போலீசார் சீல் வைத்துள்ளனர்.
குவைத்தில், அண்மையில் சமுக வலைத்தளங்களில் ஒரு வீடியோ ஒன்று வெளியாகியது. அந்த வீடியோவில் பார்ப்பதற்கு ஃபிரெஷ்ஷாக இருக்கும் மீன் ஒன்று உணவுக்காக வெட்டப்படும் பொழுது அந்த மீனின் கண்கள் கிளாஸ், பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட ''கூகுளி ஐ'' எனப்படும் பொம்மை கண். அநேக டெடிபியர் போன்ற பொம்மைகளில் இடம்பெறும் பொம்மை கண்னை பொருத்தியுள்ளது கண்டறியப்பட்டது. அந்த கண்கள் அகற்றப்பட்ட பின் அந்த மீனின் உண்மையான கண்கள் அழுகியுள்ளது தெரியவந்துள்ளது. எனவே அழுகிய மீன்களை விற்க இந்த போலி கண்கள் பொருத்தப்பட்டது தெரியவர போலீசார் அந்த கடைக்கு சீல் வைத்துள்ளனர். அந்த வீடியோவும் தற்போது பெரும் வைரலாக இணையத்தில் பரவி வருகிறது.