Skip to main content

பேஸ்புக்கை டெலிட் செய்ய இதுவே நேரம்! - சர்ச்சையைக் கிளப்பிய ட்வீட்

Published on 21/03/2018 | Edited on 21/03/2018

பேஸ்புக்கை டெலிட் செய்துவிடுங்கள் என வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் முன்னாள் துணை நிறுவனர் பிரையன் ஆக்டன் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

சமீபத்தில் கேம்ப்ரிட்ஜ் அனாலிடிக்கா என்ற நிறுவனம் முகநூல் பயன்பாட்டாளர் 50 மில்லியன் பேரின் தகவல்களை அனுமதியின்றி சோதனை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு முகநூல் அனுமதி வழங்கியதாக சொல்லப்படுகிறது. இந்த சோதனையில் பல பயன்பாட்டாளர்களின் அந்தரங்க தகவல்கள் திருடப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுகின்றன. இந்நிலையில், இன்னும் சில நாட்களில் முகநூல் முழுமையாக முடங்கிவிடும், அது பாதுகாப்பானது அல்ல, அதன் வருவாய் தலைகீழாகக் குறைந்துவிட்டது, மார்க் சுகர்பர்க்கை எங்கே? என பல செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

இந்நிலையில், வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் துணை நிறுவனராக இருந்தவரும், டெக் உலகின் மிக முக்கிய தொழில்நுட்ப வல்லுனருமான பிரையன் ஆக்டன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘இதுவே சரியான நேரம்.. பேஸ்புக்கை டெலிட் செய்துவிடுங்கள்’ என பதிவிட்டுள்ளது சர்ச்சயைக் கிளப்பியுள்ளது. பேஸ்புக் சில ஆண்டுகளுக்கு முன்னர் 19 மில்லியன் டாலர்கள் கொடுத்து வாட்ஸ்ஆப் நிறுவனத்தை விலைக்கு வாங்கியது. சில மாதங்களுக்கு அந்த நிறுவனத்தில் இருந்து பிரையன் ஆக்டன் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்