Skip to main content

தீவிர சிகிச்சையில் ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர்... தேநீரில் விஷம் கலக்கப்பட்டதாக சர்ச்சை...

Published on 20/08/2020 | Edited on 20/08/2020

 

russian opposition leader hospitalized

 

 

ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி, விஷம் கலந்த தேநீரைக் குடித்ததால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ரஷ்ய எதிர்க்கட்சி தலைவரும், ஊழல் எதிர்ப்பு அறக்கட்டளையின் தலைவருமான நவல்னி ஆளும் புதின் அரசின் அரசாங்கத்தில் நடைபெற்று வரும் ஊழல்களை மக்கள் மத்தியில் தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறார். இதனால் ஆளும்கட்சியின் மிகமுக்கிய எதிர்ப்பாளராக பார்க்கப்படும் நவல்னிக்கும், ஆளுங்கட்சியினருக்கு இடையே அடிக்கடி வார்த்தை மோதல்கள் ஏற்படுவது வழக்கம். இந்நிலையில், நவல்னி சைபீரியாவிலிருந்து மாஸ்கோவிற்கு விமானத்தின் சென்று கொண்டிருந்தபோது, அவருக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது. அதனால் விமானத்தை அவசரமாக தரையிறக்கியுள்ளனர்.

 

அவரது உடல்நிலை மிகவும் மோசமானதை தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவருக்கு விமானத்தில் வழங்கப்பட்ட தேநீரில் விஷம் கலக்கப்பட்டிருப்பதாக அவரின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்திருப்பது ரஷ்ய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விமானப்பயண நாளன்று காலை அவர் தேநீர் மட்டும்தான் குடித்ததாகவும், வேண்டுமென்றே யாரோ அதில் விஷம் வைத்துள்ளதாகத்தான் நினைப்பதாகவும் அவரது செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 44 வயதான நவல்னி மீது ஏற்கனவே தாக்குதல்கள் நடத்தப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்