Published on 12/08/2020 | Edited on 12/08/2020

கரோனா வைரஸின் தாக்கம் பிரேசிலில் நாளுக்கு நாள் அதிகரித்து, மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 31 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
கரோனா பாதிப்பில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா ஆகிய நாடுகள் முதல் நான்கு இடத்தில் உள்ளன. ஊரடங்கு உட்பட பல கட்டுப்பாடுகள் விதித்தும் கரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. பிரேசிலில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52,160 ஆக பதிவாகியுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 31 லட்சத்தைக் கடந்துள்ளது. அதேபோல் மொத்த பலி எண்ணிக்கையானது 1-லட்சத்தைக் கடந்துள்ளது.
கரோனா எனும் கொடிய வைரஸ் உலகை அச்சுறுத்தி வரும் இந்தச் சூழலில், தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியானது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது என்பது சற்று ஆறுதலான விஷயமாகப் பார்க்கப்படுகிறது.