சீன நிறுவனத்தின் டிக் டாக் செயலி புதிய பாதுகாப்பு வசதியை கொண்டுவந்துள்ளது. அவ்வப்போது சர்ச்சையில் சிக்கிவரும் டிக் டாக் செயலியில் புதியதாக ஃபில்டர் கமெண்ட்ஸ் (Filter Comments) என்ற புதிய வசதியை அந்நிறுவனம் கொண்டு வந்துள்ளது. வாட்ஸ் அப், ஃபேஸ்புக் போன்று ‘டிக் டாக்’ செயலியை ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் டிக் டாக் செயலி தடை செய்யப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்துள்ளார். அதுமட்டுமின்றி மனதளவில் டிக்டாக் செயலி பாதிக்கச்செய்வதாக கூறி சீன நிறுவனத்தின் டிக்டாக் செயலியைத் தடை செய்ய வேண்டும் என பல்வேறு நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. அமெரிக்காவின் தலைமை வர்த்தக ஆணையம், டிக் டாக் செயலி அனுமதியில்லாமல் சிறுவர்களின் தகவல்களை திரட்டியதாக ரூ.40 கோடி அபராதம் விதித்து சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர் புகார்களுக்குப் பதில் அளித்த டிக் டாக் நிறுவனம், செயலி பாதுகாப்பானதாக மாற்றி அமைக்கப்படும் என்று தெரிவித்தது.
இந்நிலையில் புதிய பாதுகாப்பு அம்சமாக ஃபில்டர் கமெண்ட்ஸ் என்ற புதிய வசதியை டிக் டாக் கொண்டு வந்துள்ளது. வீடியோவுக்கு ரசிகர்கள் கமெண்ட் செய்வதை தடுக்கும் விதமாக இந்த அப்டேட் விடப்பட்டுள்ளது. இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பல வார்த்தைகளை தானகவே இந்த பில்டர் கமெண்ட்ஸ் தடுத்து நிறுத்திவிடுகிறது.
மேலும் நமக்கு தேவையில்லை என்று நினைக்கும் வார்த்தைகளையும் அந்தப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளும் வசதியையும் டிக்டாக் செயலி தற்போது கொண்டுவந்துள்ளது. இதன் மூலம் பல குறுப்பிட்ட வார்த்தைகளை கமெண்டில் வராமல் தடுத்துக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.