
ஒரு வாரத்திற்கும் மேலாக ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதலைத் தொடங்கி நடத்தி வருகிறது. தொடர் போர் சூழல் காரணமாக அங்கு பதற்றம் நிலவி வரும் நிலையில் தொடர் தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, பல முக்கிய நகரங்களைக் கைப்பற்றி முன்னேறி வருகிறது. இரு தரப்பிற்கும் இடையே கடந்த திங்கட்கிழமை பெலாரஸ் நாட்டில் உள்ள கோமல் நகரில் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், இறுதி முடிவு எதுவும் எட்டப்படாமல் அப்பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இன்றும் சமாதான பேச்சுவார்த்தை நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் கீவ் நகரில் 20 ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்து வந்த காதல் ஜோடி போர்க்களத்தின் நடுவிலேயே திருமணம் செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. கீவ்வை சேர்ந்த லேசியா-பலேரி ஆகிய இருவரும் கடந்த 20 ஆண்டுகளாக காதலித்து ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் ராணுவ உடையிலேயே ராணுவ வீரர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டனர். இந்த திருமண நிகழ்வில் கீவ் நகர மேயர் கலந்து கொண்டார்.