Skip to main content

இலங்கை அமைச்சர்களுக்கு தமிழ்நாடு மாணவர் கழகம் கண்டனம்!

Published on 14/10/2020 | Edited on 14/10/2020

 

dddd

 

தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் சென்னையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடந்தது. 

 

அப்போது பேசிய தமிழ்நாடு மாணவர் கழகத்தின் அன்பரசன், ''கரோனா காலக்கட்டத்திலும் மாணவர்களாகிய நாங்கள், இங்கு வரக் காரணம் என்னவென்றால் சமீப காலமாக இலங்கை நாடாளுமன்றத்தில் நடைபெறுகின்ற அரசியல் நிகழ்வுகள் அனைத்தும் தமிழர்களுக்கு எதிராக இருக்கிறது. இங்கு இருக்கும் தமிழக மக்களுக்கு வருத்தம் அளிப்பதாக இருக்கிறது. 

 

குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் கடந்த அக்டோபர் 6ஆம் தேதி இலங்கை நாடாளுமன்றத்தில் பிரபாகரன் மகன் பாலச்சந்திரனை சிறார் படைத் தளபதி என்றும் அவரை அதனால்தான் சுட்டுக்கொன்றோம் என்ற பாணியில் பேசிய அமைச்சர் சரத் பொன்சேகாவை வன்மையாகக் கண்டிக்கிறோம். 

 

காரணம். அவர் அங்கே பள்ளிப் படிப்பை படித்தற்கான ஆதாரம் இன்னும் அங்கே இருக்கின்றது. 12 வயது பாலகனை கொன்றது மிகப்பெரிய போர்க்குற்றம் ஆகும். அந்த போர்க்குற்றத்தை நியாயப்படுத்த விரும்புகின்ற இந்த சிங்கள அரசை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

 

Ad

 

அதுமட்டுமல்லாமல் இலங்கை அமைச்சர் சரத் வீரசேகர நாடாளுமன்றத்தில் தமிழர்களின் உரிமைக்களுக்காக போராடிய பெரியாரை நாஜிகளுடன் ஒப்பிட்டுப் பேசியுள்ளார். யார் நாஜி வேலை செய்தது என்று எல்லோருக்கும் தெரியும். காரணம், பாலச்சந்திரன் இறந்தபோது ஜெயலலிதா அளித்தப் பேட்டியில் இலங்கை ராணுவம் நாஜி வேலை செய்தது என்று அவர் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். 


பெரியாரை இப்படிப் பேசியதற்கு தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்