எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் கடந்த 2015 ஆம் ஆண்டு, 'தி ஃபால்கன் 9 பூஸ்டர்' என்ற ராக்கெட்டை ஏவியது. விண்வெளி வானிலை செயற்கைக்கோளை அனுப்புவதற்காக ஏவப்பட்ட இந்த ராக்கெட் தனது பணியை முடித்தபோதிலும், போதுமான எரிபொருள் இல்லாததால் பூமிக்கு திரும்ப முடியவில்லை.
இதனைத்தொடர்ந்து இந்த ராக்கெட் விண்வெளியிலேயே கை விடப்பட்டது. இந்தநிலையில் விண்வெளியில் கைவிடப்பட்ட இந்த 'தி ஃபால்கன் 9 பூஸ்டர்' நிலவில் மோதவுள்ளது. நிலவில் மோதியதும் இந்த ராக்கெட் வெடித்து சிதறும் என்றும், நிலவில் சிறிய பள்ளம் ஏற்படும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் நாசா, தி ஃபால்கன் 9 பூஸ்டர் ராக்கெட் மோதுவதால், நிலவில் ஏற்படும் பள்ளத்தை ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளதோடு, ராக்கெட் மோதுவதால் ஏற்படும் பள்ளம் ஏற்படவுள்ள நிகழ்வை, ஆராய்ச்சி செய்வதற்கான அருமையான வாய்ப்பு எனவும் தெரிவித்துள்ளது. 'தி ஃபால்கன் 9 பூஸ்டர்' வரும் மார்ச் 4 ஆம் தேதி நிலவில் மோதும் என கணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.