
சிதம்பரம் காந்தி சிலை அருகே தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி பெண்கள் மற்றும் சைவம், வைணவம் குறித்து அவதூறாக பேசியுள்ளார் என அதிமுகவினர் தமிழக முழுவதும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் சிதம்பரத்தில் அதிமுக கடலூர் கிழக்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் அமைச்சர் பொன்முடியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம் தலைமை தாங்கினார்.
இதில் மகளிர் அணி இணைசெயலாளர் ரங்கம்மாள், சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே ஏ பாண்டியன், அதிமுக மாநில அமைப்பு செயலாளர் முருகுமாறன், மாநில அம்மா பேரவை துணைச்செயலாளர் பாலமுருகன்,இளக்கிய அணி மாவட்ட செயலாளர் தில்லைகோபி உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு அமைச்சர் பொன் முடியை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள். இதேபோல் அதிமுக கடலூர் மேற்கு மாவட்டம் சார்பில் விருத்தாசலத்தில் அமைச்சர் பொன்முடியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.