Published on 03/07/2019 | Edited on 03/07/2019
சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நேர்க்கோட்டில் நிலவு வரும்போது தோன்றும் காட்சியே சூரிய கிரகணம் எனப்படுகிறது. நேற்று மாலை 4.30 மணியளவில், தென் அமெரிக்காவின் சிலி மற்றும் அர்ஜைண்டினா பகுதிகளில் இத்தகைய முழு சூரிய கிரகணம் தோன்றியுள்ளது. நிலவு, சூரியனை படி படியாக மறைத்து இறுதியில் முழுமையாக மூடி, வட்ட வடிவ ஒளிக்கீற்றாக தோன்றுவதை, பலரும் பிரத்தியேக கண்ணாடிகள் வழியே கண்டு ரசித்தனர்.