Skip to main content

"தற்போதைக்கு நமது முக்கிய நோக்கம் இதுதான்" - எல்லை பிரச்சனை குறித்து சீன தூதரின் பேச்சு...

Published on 27/05/2020 | Edited on 27/05/2020

 

china ambassador about india china border issue

 

இந்திய சீன எல்லைப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவி வரும் நிலையில், இந்த பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கலாம் எனச் சீன தூதர் சன் வெய்டாங் தெரிவித்துள்ளார். 


அருணாச்சல பிரதேசத்தை தொடர்ந்து தற்போது லடாக் மற்றும் சிக்கிம் ஆகிய பகுதிகளிலும் வரையறுக்கப்பட்ட எல்லையை தாண்டி, இந்தியாவின் சில பகுதிகளை சொந்தம் கொண்டாடும் சீனா, அப்பகுதிகளில் ராணுவ நடமாட்டத்தையும் அதிகரித்துள்ளது. கடந்த 5-ஆம் தேதி லடாக் எல்லை பகுதியில் இந்திய- சீன வீரர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டதாகத் தகவல் வெளியானது. இதனை தொடர்ந்து அப்பகுதியில் இருநாட்டு ராணுவமும் படைகளை குவித்து வரும் சூழலில், எந்த மோசமான சூழ்நிலையையும் சமாளிக்கத் தயாராக இருக்கும்படி சீன அதிபர் அந்நாட்டு ராணுவத்திற்கு உத்தரவிட்டது மேலும் பரபரப்பை அதிகரித்தது. இதனை தொடர்ந்து இந்த எல்லை பிரச்சனையில் இரு நாடுகளுக்கும் இடையே சமரசம் செய்ய தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார்.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள சீன தூதர் சன் வெய்டாங், "இரு தரப்பு பேதங்களை பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க முடியும். சீனாவும், இந்தியாவும் கரோனா வைரஸுக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுகின்றன. அதேபோல இருநாட்டு உறவுகளை பலப்படுத்தும் முக்கியமான பணியும் நமக்கு உள்ளது. சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையிலான உறவை நம் இளைஞர்கள் உணர வேண்டும். இந்தியா - சீனா இடையிலான கருத்து வேறுபாடுகளை நாங்களே பேசி தீர்த்துக் கொள்வோம். தற்போதைக்கு கரோனா வைரஸை எதிர்த்துப் போராட வேண்டியதுதான் இரு நாடுகளின் முக்கிய நோக்கம்" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்