இஸ்ரேலில் உள்ள ஒரு மின் நிலையத்திலிருந்து கடலில் சேரும் வெப்ப நீரில் குதூகலமாக குளிக்க வருகை தரும் சுறாக்களால் அங்கு சுவாரசியம் கூடியுள்ளது.
இஸ்ரேலில் குளிர் காலம் நிலவுவதால் அங்குள்ள ஒரு மின் நிலையத்திலிருந்து வெளியேறும் வெப்பமான நீர் கடல் பகுதியில் நேரடியாக திறந்துவிடப்படுகிறது. இந்த நிகழ்வு மின் நிலையத்துலிருந்து தொடர்ந்து எல்லா காலநிலைகளில் வெளியேற்றபட்டாலும் குளிர் காலத்தில் மட்டும் எங்கிருந்தாதான் இந்த சுறா கூட்டம் வருகிறன்றதோ என்றுகூட தெரியவில்லை என அந்த கடல் பகுதியில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் டைவர்கள் கூறுகின்றனர்.
இங்கு வரும் அந்த சுறாக்கள் அந்த வெப்பநீரோடு கலந்த கடல் நீரில் வெதுதுப்பான கடற்கரையில் உல்லாச குளியல் போடுகின்றது. அதைவிட அதிசய நாம் எப்பொழுதுமே டால்பின்களைதான் மனிதர்களுக்கு உதவிசெய்யும் நட்புடன் நடந்துகொள்ளும் ஒரு கடல் பிராணி என்ற எண்ணம் எல்லாரிடமும் இருந்துவருகின்றது. ஆனால் இங்கு வரும் சுறாக்கள் நம்மை குளிக்க மனிதர்கள் விடுவார்களோ விடமாட்டார்களோ என என்ன நினைத்ததோ தெரியவில்லை அனைத்தும் சாதுவாக நடந்து கொள்கின்றன. நாங்கள் கடலில் நீந்தும் போதுகூட அவைகள் தங்களை கண்டுகொள்ளாமல் வெதுவெதுப்பான நீரில் நீந்தி குதுகளிக்கின்றன.
வருடத்தின் வரும் ஒவ்வொரு குளிர் காலத்திலும் இது நடந்து வருகின்றது. மற்ற நாட்களில் இங்கு சுறாக்களை இப்படி கடலின் கரை பகுதியில் பார்ப்பதே அரிது என்கின்றனர் டைவர்கள்.