Published on 31/08/2018 | Edited on 31/08/2018

ரஷ்யாவில் இந்தியா பாகிஸ்தான் ராணுவ படைவீரர்கள் ஒன்ற சேர்ந்து பாலிவுட் பாடலுக்கு நடனமாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரஷ்யாவில் செபர்கள் நகரில் ஷாங்காய் கூட்டுறவு அமைப்பு சார்பில் தீவிரவாத எதிர்ப்பு கூட்டுப்பயிற்சி நடைபெற்றது. இதில் எப்போதும் இல்லாத வகையில் முதல்முறையாக இந்தியா பாகிஸ்தான் படைவீரர்கள் ஒன்றாக கலந்துகொண்டனர். அப்போது இருநாட்டு படைவீரர்களும் ஒன்றாக பாலிவுட் பாடலுக்கு நடனமாடினர். அவர்கள் கூட்டாக நடனமாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இது தொடர்பான புகைப்படங்களை டெல்லியில் உள்ள ரஷ்ய தூதரகம் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.