ரஷ்யா, உக்ரைன் மீது நான்காவது நாளாக தாக்குதலைத் தொடர்ந்து வருகிறது. இதில் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. உக்ரைன் தலைநகர் கீவை கைப்பற்ற ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைன் மக்கள் உயிர் பிழைப்பதற்காக தங்கள் நாடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். பலர் மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளிட்ட சுரங்கப்பாதைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
உலகமே உக்ரைன்-ரஷ்யா மோதலை உற்றுநோக்கி வரும் நிலையில், ஏமன் நாட்டில் உள்ள சனா சர்வதேச விமான நிலையத்தின் மீது சவூதி வெடிகுண்டு தாக்குதலை நடத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் ஏமன் உள்நாட்டு போரில், அந்நாட்டின் ராணுவ கிளர்ச்சிக்கு எதிராக சவூதி போரில் ஈடுபட்டு வரும் நிலையில், போர் விமானங்கள் மூலம் இந்த வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.