Published on 30/03/2021 | Edited on 30/03/2021
இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில், காட்டுத்தீ பரவி வருகிறது. கடந்த சில மாதங்களாக அந்தநாட்டில் மழை பொழியாததே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. இந்தக் காட்டுதீ தொடர்ந்து பரவிவருவததால், அந்தநாட்டில் காற்று மாசு ஏற்பட்டுள்ளது.
நேபாள தலைநகர் காத்மாண்டுவில், காற்றில் தீங்கு விளைவிக்கும் பொருட்களின் அளவு, 2.5 மைக்ரான்ஸிலிருந்து 632 மைக்ரான்ஸ்களாக கடந்த 26 ஆம் தேதி அதிகரித்தது. இதனால் நுரையீரல் தொடர்பான நோய் உள்ளவர்களும், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களும் மட்டுமின்றி உடல்நலத்துடன் உள்ள மக்களும் பாதிக்கப்பட்டனர்.
இதனையடுத்து அந்தநாட்டின் அனைத்து கல்வி நிறுவனங்களும், வரும் ஏப்ரல் இரண்டாம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அந்தநாட்டின் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.