Skip to main content

பிலிபைன்ஸ் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

Published on 29/12/2018 | Edited on 29/12/2018

 

pp

 

பிலிபைன்ஸ் நாட்டின் தென்பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2-ஆக பதிவாகியுள்ளது. இதனால் பிலிபைன்ஸ் நாட்டின் தென்பகுதியில் அமைந்துள்ள மின்டானோ தீவில் பதற்றம் நிலவிவருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

Published on 02/12/2023 | Edited on 02/12/2023

 

A powerful earthquake in the Philippines

 

பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

 

பிலிப்பைன்ஸின் மிண்டோனா என்ற பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் அந்த பகுதியில் உள்ள கட்டிடங்கள் அனைத்தும் குலுங்கின. இதனால், அங்கிருந்த மக்கள் அனைவரும் அச்சம் அடைந்துள்ளனர். 

 

இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து பிலிப்பைன்ஸ், ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் இந்தோனேசியாவுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸில் கடந்த மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அங்கு 8 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

 

Next Story

பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

Published on 12/09/2023 | Edited on 12/09/2023

 

Powerful earthquake in the Philippines

 

பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டதால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

 

ஏற்கனவே மொராக்கோவில் இருந்து 75 கி.மீ. தொலைவில் உள்ள மாரேஷ் என்ற பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலை 03.14 மணிக்கு கடந்த 120 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 8.36 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டேர் அளவுகோலில் 6.8 என்ற அளவில் பதிவாகி இருந்தது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வுகளால் பழமையான கட்டடங்கள், குடியிருப்பு கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன. தற்பொழுது வரை அங்கு உயிரிழப்பு எண்ணிக்கை 2,122 ஆக அதிகரித்துள்ளது.

 

இந்நிலையில் பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா பகுதியில் இருந்து வடக்கே சுமார் 524 கிலோ மீட்டர் தொலைவில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. உணரப்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகளில் 6.4 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. இந்த நிலநடுக்க தகவலால் அங்கிருக்கும் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.