பூமியின் மேற்பரப்பில் 400 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தினை அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனத்தின் க்ருவு டிராகன் எனும் ராக்கெட் நேற்று அதிகாலை 5.30 மணிக்கு சென்றடைந்துள்ளது.
சர்வதேச வரலாற்றில் முதல் முறையாக ஒரு தனியார் ராக்கெட் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அடைவது இதுவே முதல்முறை. அமெரிக்காவைச் சேர்ந்த எலன் மஸ்க் என்பவரால் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனம் இயங்கிவருகிறது. வெகுநாட்களாகவே இந்நிறுவனம் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் ஈடுப்பட்டுவருகிறது. கடந்த ஆண்டே இந்நிறுவனத்தின் நிறுவனர் எலன் மஸ்க் 2019-ம் ஆண்டு இறுதிக்குள் விண்வெளிக்கு ஸ்பேஸ்-எக்ஸ் மூலம் மனிதர்கள் பயணிப்பார்கள் எனத் தெரிவித்திருந்தார். தற்போது ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனம் அனுப்பியிருக்கும் க்ருவ் டிராகன் அதற்கான முன்னோட்டோமே என்பது குறிப்பிடத்தக்கது.
க்ருவ் டிராகன் ராக்கெட்டில் ஒரு மனித உருவ பொம்மையும், லிட்டில் எர்த் எனும் குட்டி பொம்மையும் பயணித்தன. இந்த ராக்கெட், சர்வதேச விண்வெளி ஆய்வு கூடத்தில் ஐந்து நாட்கள் இருக்கும் பின் பூமிக்கு திரும்புகிறது.
சர்வதேச விண்வெளி ஆய்வு மையம், 1998-ல் நிறுவப்பட்டது. புவி பரப்பில் இருந்து 400 கி.மீ உயரத்தில் இது அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.