ஐரோப்பாவில் இருக்கும் மால்டோவா எனும் நாடு, ஐரோப்பவில் உள்ள நாடுகளிலேயே மிகவும் ஏழ்மையான, ஊழலான நாடாக கருத்தப்படுகிறது. ஆனால், ஃபேஸ்புக் வெளிட்ட்டுள்ள பொய்யான செய்திகளும் தகவல்களும் நிறைந்துள்ள பகுதிகள் எனும் பட்டியலில் இந்த நாடு இடம்பெறவில்லை.
ஃபேஸ்புக் வெளியிட்டுள்ள பொய்யான செய்திகளும் தகவல்களும் நிறைந்துள்ள பகுதிகள் எனும் பட்டியலில் ஏன் இந்த நாடு இடம்பெறவில்லை என்பதை அந்நாட்டில் இருக்கும் தொழில்நுட்ப வல்லுநர்கள் விளக்கியுள்ளனர். ஃபேஸ்புக்கில் பரப்பப்படும் பொய்யான மற்றும் போலியான செய்திகளையும் அதனை பதிவு செய்பவர்களையும் கண்டறிய அவர்கள், பிரவுசரில் ட்ரால்லெஸ் என்ற மென்பொருளை இன்ஸ்டால் செய்துள்ளனர்.
பின் அதன் மூலமாக போலியான கணக்குகளைப் பற்றிய ஒரு தரவை தயார் செய்துள்ளனர். அதன் பின் அவர்கள் சேகரித்த தரவுகளை ஃபேஸ்புக்கின் புகார் தெரிவிப்பதற்கான வசதியை பயன்படுத்தி அவர்கள் கவனத்துக்கு எடுத்துச் சென்றுள்ளனர். அதன்பிறகு அவதூறு பரப்பும் 168 போலி கணக்குகள், 26 பக்கங்கள் மற்றும் 8 இன்ஸ்டாகிராம் கணக்குகளை பேஸ்புக் நிறுவனம் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நீக்கியுள்ளது.
பொய் செய்திகள் பற்றி ஃபேஸ்புக் நிறுவனத்தின் கவனத்துக்கு எடுத்துச் செல்ல இவர்களுக்கு 3 வருடங்கள் ஆகியுள்ளது. அதன் பிறகே பேஸ்புக் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.