Published on 05/11/2018 | Edited on 05/11/2018
இலங்கையில் கடந்த மாதம் 26-ஆம் தேதி மைத்ரிபால சிறிசேனாவின் கட்சி உடைந்து ரணில் விக்ரமசிங்கே பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதன் பின் இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே இலங்கையின் பிரதமராக அன்றைய தினமே பொறுப்பேற்றார். அதன் பின் 29-ஆம் தேதி இலங்கை நாடாளுமன்றத்தை கூட்டக் கோரி 126 எம்.பி.க்களின் கையெழுத்து கொண்ட கடிதத்தை நாடாளுமன்ற சபாநாயகரிடம் ஒப்படைத்திருந்தார் ரணில் விக்ரமசிங்கே.
இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பளிக்க வலியுறுத்தி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார். இதனிடையே நவம்பர் மாதம் 14-ஆம் தேதி நாடாளுமன்ற கூட்டம் நடைபெறும் என அந்நாட்டு அதிபர் மைத்திரிபால சிறிசேனா அறிவித்துள்ளார்.