ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில், ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி குவாசிம் சுலைமான், ஈராக்கின் ஹஸ் அல் ஷபாபி துணை ராணுவப்படையின் துணைத் தலைவர் அபு மஹதி அல் முஹன்திஸும் ஆகியோர் கொல்லப்பட்டனர். டிரம்ப்பின் அறிவுறுத்தலின்பேரிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க ராணுவம் அறிவித்தது. இந்த தாக்குதல் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில், நேற்று ஈரான் நாட்டில் உள்ள புஷ்பார் அணு உலையை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று ரிக்டர் அளவில் 4.9 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பொதுமக்கள் போர் பதற்றத்தில் இருக்கும் நிலையில் இந்த நிலநடுக்கம் அந்நாட்டு மக்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்நிலையில் அணு உலைக்கு அருகில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், ஈரான் அணு ஆயுத சோதனை நடத்தியிருக்கலாம் என்று தற்போது உலக நாடுகள் சந்தேகம் எழுப்பியுள்ளன. இதுதொடர்பாக அமெரிக்கா ரகசியமாக விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகின்றது.