நேபாள பிரதமர் கக்டா பிரசாத் ஷர்மா ஒலி கடுமையான இருமல் மற்றும் காய்ச்சல் காரணமாக இன்று அதிகாலை நான்கு மணிக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த பத்து நாட்களாகவே இவருக்கு இருமல் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் இவருடைய அமைச்சரவை கூட்டம்கூட தள்ளிவைக்க நேர்ந்தது. ஏனினும் நேற்று அமைச்சரவை கூட்டத்தில் உடல்நிலை சரியில்லாமலே கலந்துகொண்டுள்ளார். இன்று அதிகாலை திடிரென கடுமையான இருமல் மற்றும் காய்ச்சலின் காரணமாக காத்மண்டுவிலுள்ள திரிபுவன் மருத்துவ பல்கலைக்கழகத்திலுள்ள மருத்துவமனியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிரதமரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
கக்டா இரண்டாவது முறையாக நேபாளத்தின் பிரதமராக பதவி வகுக்கிறார். அறுபத்தியாறு வயதுடைய கக்டா, 11 வருடத்திற்கு முன்பு கிட்னி கோளாறு காரணமாக மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளார். இதனால் இவருக்கு நோய் தொற்று ஏற்படுவது சாதராணமான ஒன்று என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.