பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க இந்தியா ஐ.நா.வில் பல முயற்சிகள் எடுத்தும் சீனா தனது வீட்டோ அதிகாரத்தால் அதனை தடுத்து வருகிறது.
புல்வாமா தாக்குதலுக்கு பின் பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க ஐ.நா வில் தீர்மானம் கொண்டுவந்தது. இந்நிலையில் இந்த முறையும் சீனா தனது அதிகாரத்தால் இதற்கு முட்டுக்கட்டை போட்டது. இதனை தொடர்ந்து பிரான்சில் உள்ள மசூத் அசார் சொத்துக்களை முடக்குவதாக பிரான்சு அரசு அறிவித்துள்ளது.
பிரான்சு உள்துறை அமைச்சகம், நிதி அமைச்சகம், வெளியுறவுத்துறை அமைச்சகம் ஆகியவை வெளியிட்ட கூட்டறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டது. மசூத் அசாரை ஐரோப்பிய யூனியன் பயங்கரவாதத்தில் ஈடுபடும் நபர்கள் பட்டியலில் மசூத் அசாரை இணைப்பது தொடர்பாக ஆலோசிக்க இருப்பதாகவும் பிரான்சு தெரிவித்துள்ளது.