
நேபாளத்தின் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேபாளத்தில் வடமேற்குப் பகுதியில் நேற்று இரவு இந்திய நேரப்படி 11.52 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.4 ஆகப் பதிவாகி இருந்தது. இதனால், வீடுகள் மற்றும் கட்டடங்கள் குலுங்கின. மக்கள் குடியிருப்புகளை விட்டு அலறியடித்து வெளியே ஓடினர். இந்த நிலநடுக்கம் வட இந்தியாவில் சில மாநிலங்களிலும் உணரப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் 128 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது. பலர் படுகாயமடைந்துள்ள நிலையில் நேபாளத்தில் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இடிபாடுகளில் சிலர் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் கூடும் எனச் சொல்லப்பட்டது.
இந்த நிலையில், காயமடைந்தவர்களை அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்திருந்த நிலையில், அந்த மருத்துவமனை நிரம்பி வழிவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இந்நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 150யை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மீண்டும் நிலநடுக்கம் ஏற்படுமோ என்ற அச்சத்தில் மக்கள் வீடுகளுக்கு வெளியே தங்கியிருக்கின்றனர்.