Skip to main content

பார்க்கும் இடமெல்லாம் நண்டுகள்... பாதை அமைத்து கொடுத்த அரசாங்கம்

Published on 31/10/2022 | Edited on 31/10/2022

 

Christmas Island Millions red crab

 

ஆஸ்திரேலியாவில் உள்ள கிறிஸ்மஸ் தீவு சிவப்பு நிற நண்டுகளால் வண்ணமயமாகவும், ரம்மியமாகவும் காட்சியளிக்கிறது. 

 

காடுகளில் வசிக்கும் சிவப்பு நிற நண்டுகள், இனப்பெருக்கக் காலத்தில் கடலுக்கு இடம் பெயர்தலை வழக்கமாகக் கொண்டுள்ளது. பொதுவாக அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்கள்தான் நண்டுகளின் இனப்பெருக்கக் காலகட்டம். அதனால் சிவப்பு நிற நண்டுகள் தங்களின் இனப்பெருக்கத்திற்காகக் கடலுக்கு இடம் பெயர்ந்து, அங்கு முட்டையிட்டு, மீண்டும் தனது வசிப்பிடமான காட்டிற்குத் திரும்புவதை வழக்கமாக வைத்து வருகிறது. 

 

அப்படி நண்டுகள் இடும் முட்டைகள் பாதி மீன் மற்றும் கடல் வாழ் உயிரினங்களுக்கு உணவாகிவிடும்.  மீதமுள்ள முட்டைகள் மட்டுமே குஞ்சு பொரித்து தனது இருப்பிடமான காட்டிற்குச் செல்லும்.  அந்த வகையில், தற்போது நண்டுகளின் இனப்பெருக்கக் காலகட்டம் என்பதால் சிவப்பு நிற நண்டுகள் கடலை நோக்கி படையெடுத்து வருகிறது. 

 

Christmas Island Millions red crab

 

இதனால் ஆஸ்திரேலியாவில் உள்ள கிறிஸ்மஸ் தீவில் லட்சக்கணக்கான நண்டுகள் இடம்பெயர்ந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அரசு நண்டுகளின் பாதுகாப்பிற்காகப் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நண்டுகள் இடம் பெயர்தலுக்காகப் பாதை அமைத்துள்ளது. மேலும், ஏராளமான சிவப்பு நண்டுகள் சாலையிலும் பயணிப்பதால் அங்கு சில இடங்களில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அவ்வழியாக செல்லும் சுற்றுலாப் பயணிகள் சாலையோரம் தங்களது வாகனத்தை நிறுத்திவிட்டு லட்சக்கணக்கான நண்டுகள் ஒரே நேரத்தில் அணிவகுத்து செல்வதைப் பார்த்துக் கண்டுகளித்து வருகின்றனர்.  

 

 

சார்ந்த செய்திகள்