Published on 08/06/2019 | Edited on 08/06/2019
அடுத்த ஆண்டு முதல் பொதுமக்களும் விண்வெளிக்கு சுற்றுலா செல்லலாம் என அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா அறிவித்துள்ளது.
இது தொடர்பாக நாசா தலைமை அதிகாரி கூறுகையில், விண்வெளி சுற்றுலாவுக்கு ஏற்ப விண்வெளியில் மையம் ஒன்று அமைக்கப்பட்டு பயணிகள் அங்கு தங்கவைக்கப்படுவர் என குறிப்பிட்டார். மேலும் இந்த ஆண்டின் இறுதியில் இதற்கான சோதனை பயணம் நடைபெற உள்ளதாகவும் கூறினார். இந்த சோதனைக்கு பின்பு அடுத்த ஆண்டுக்குள் வர்த்தக ரீதியாக விண்வெளி சுற்றுலா செல்வது நடைமுறைக்கு வரும் எனவும் அவர் குறிப்பிட்டார்.