Skip to main content

அபூர்வ நோயால் அவதிப்படும் முஷாரப்... மருத்துவமனையில் தீவிர சிகிச்சை...

Published on 19/03/2019 | Edited on 19/03/2019

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் மு‌ஷரப், நரம்பு சம்பந்தமான நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு கடந்த 2016–ம் ஆண்டு முதல் மருத்துவ சிகிச்சைக்காக துபாயில் வசித்து வருகிறார்.

 

musharaf

 

இந்நிலையில் தற்போது உடல்நிலை மேலும் மோசமடைந்துள்ள நிலையில் துபாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அமைலாடோசிஸ் என்ற அறிய வகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு நிற்கவும், நடக்கவும் முடியாததால் படுத்த படுக்கையாக இருந்து வருகிறார்.

’அமைலோடோசிஸ்’ என்பது உடலில் உள்ள புரதம் உடைந்து பல்வேறு உறுப்புகளில் படிந்து விடுவதாகும். இதனால் அவரது எலும்புகள் பலவீனமடைந்து உடல் அசைவுகள் குறையும். கடந்த இரு ஆண்டுகளாக இதற்கான சிகிச்சையில் இருந்த அவருக்கு தற்போது உடல்நிலை மோசமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும், அவர் விரைவில் குணமடைந்து வீட்டிற்கு திரும்புவார் எனவும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் வெளிநாட்டு பிரிவின் தலைவர் அப்சல் சித்திகி தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்