மெக்சிகோ நாட்டில் மால்டா நகரில் உள்ள ஒரு குப்பைத் தொட்டியில், பயன்படுத்திப் போட்ட கார் டயர் ஒன்று இருந்துள்ளது. அங்கு உணவைத் தேடிச் சென்ற 10 மாத பெண் நாய் ஒன்று, அந்த டயரைக் கண்டதும் ஜாலியாக விளையாடிக் கொண்டிருந்தது. கார் டயரை தலையால் முட்டி விளையாடிக் கொண்டிருந்தபோது, திடீரென நாயின் தலை, அந்த டயரின் நடு துவாரத்தில் சிக்கியது. தலையை நாயால் வெளியே எடுக்க முடியாமல் திணறியது.
இதனால் வலி தாங்காமல் அந்தப் பெண் நாய் கத்தத் துவங்கியது. அதைக் கண்ட அங்கிருந்த மக்கள், அதனை மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. பின்னர், இதுகுறித்து அப்பகுதி பொதுபமக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள், நாயின் தலை மாட்டியுள்ள கழுத்தில் சிறிது பெட்ரோலியம் ஜெல்லை தடவி, அதன் முகத்தை பிடித்து அங்கும், இங்கும் அசைத்தனர். பின்னர் நீண்ட நேரத்திற்குப் பிறகு, மெதுவாக டயரிலிருந்து நாயின் கழுத்தை வெளியே எடுத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.