கருக்கலைப்பு மருத்துவராக இருந்த ஒருவரின் வீட்டில் பதப்படுத்தப்பட்ட 2246 கருக்கள் கண்டறியப்பட்டுள்ளது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் சிகாகோ நகருக்கு அருகே உள்ள பகுதி இலினோய், அங்கு கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக அல்ரிச் க்லொஃபெர் என்பவர் மருத்துவராக இருந்துள்ளார். தசை மற்றும் எழும்பு மருத்துவரான இவர், பெண்களுக்கான கருகலைப்பு செய்யும் மையத்தையும் நடத்தி வந்துள்ளார். இவர் கடந்த 3 ஆம் தேதி வயது மூப்பினால் இறந்த நிலையில், அவரது குடும்பத்தினர் அவரது வீட்டின் ஒரு பகுதியில் 2246 கருக்கள் பதப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்துள்ளனர்.
பல ஆண்டுகளாக கருக்கலைப்பு செய்யப்பட்ட இந்த கருக்களை, அந்த மருத்துவர் பதப்படுத்தி வைத்திருந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த கருக்களை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர், அதிகாரிகளை தொடர்புகொண்டுள்ளனர். பின்னர் அங்கு வந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கருக்களை கைப்பற்றி எடுத்து சென்றனர். இறந்த அந்த மருத்துவர் கடந்த 2016 ஆம் ஆண்டு வரை கருக்கலைப்பு மையம் நடத்தி வந்த நிலையில், பதிமூன்று வயது சிறுமிக்கு அதிகாரிகளிடம் கூறாமல் கருக்கலைப்பு செய்துவிட்டார் என கூறி அவரது உரிமம் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் அவரது வீட்டிலிருந்து 2000 க்கும் மேற்பட்ட கருக்கள் கண்டறியப்பட்டுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.