அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அமெரிக்காவை அணு ஆயுத சோதனையால் அச்சுறுத்திய வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் ஆகியோர் நேருக்குநேர் சந்தித்துப் பேச நீண்ட நாட்களாக ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
இருந்தும் இதை தொடர்ந்து வடகொரியா, தென்கொரியா அதிபர்கள் சந்தித்துப் பேசிய பன்முன்ஜோம் எல்லைப்பகுதியில் உள்ள 'பீஸ் ஹவுஸ்' என்ற கட்டிடத்தில் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்-னை சந்தித்துப் பேச டிரம்ப் விருப்பம் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து இருவரின் சந்திப்பு நடைபெறும் தேதி மற்றும் இடம் ஆகியவை இன்னும் முடிவு செய்யப்படாமல் உள்ள நிலையில் தற்போது டிரம்ப் மற்றும் கிம் ஜாங் அன் ஆகியோரின் சந்திப்பு சிங்கப்பூரில் நடைபெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் இதுதொடர்பாக மூத்த அமெரிக்க அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில்....."டிரம்ப், கிம் சந்திப்புக்காக பல்வேறு நாடுகளின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. ஆனால், இவர்கள் சந்திப்பு சிங்கப்பூரில் நடைபெற அதிகம் வாய்ப்புள்ளது. சந்திப்பு குறித்த தகவல்கள் இறுதி செய்யப்படவில்லை" என தெரிவிக்கப்பட்டுள்ளது.