Skip to main content

பாகிஸ்தான் மருத்துவமனையில் மசூத் அசார்...

Published on 02/03/2019 | Edited on 02/03/2019

 

fdgfdgfd

 

கடந்த பிப்ரவரி 14-ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் நடைபெற்ற பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை மையமாக கொண்டு இயங்கும் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கம் பொறுப்பேற்றுக்கொண்டது. இந்நிலையில், இந்திய விமானப்படையைச் சேர்ந்த போர் விமானங்கள், ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பால்கோட் என்ற இடத்தில் நுழைந்து பயங்கரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. அதன்பின் நடைபெற்ற சண்டையில் இந்திய விமானி அபிநந்தன் பாகிஸ்தானால் கைது செய்யப்பட்டு, நேற்று விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் தலைவன் மசூத் அஸாருக்கு பாகிஸ்தான் தொடர்ந்து பாதுகாப்பு வழங்கி வருவதாக இந்தியா உட்பட உலக நாடுகள் குற்றம் சாட்டின. இந்நிலையில் ஜெய்ஷ்-இ- முகமது தீவரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் சிறுநீரக கோளாறு காரணமாக டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வருவதாகவும், பாகிஸ்தான் ராணுவ மருத்துவமனையிலேயே சிகிச்சை நடைபெறுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்