Skip to main content

நிலவுக்கு விண்கலத்தை அனுப்பும் ஜப்பான்

Published on 06/09/2023 | Edited on 06/09/2023

 

Japan sends spacecraft to the moon

 

நிலவை ஆய்வு செய்யும் ஜப்பான் விண்கலம் ஸ்சிலிம் (SLIM) நாளை விண்ணில் பாய்கிறது.

 

இந்தியா சார்பில் நிலவின் தென் பகுதியை ஆராயக் கடந்த ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் பாய்ந்த சந்திரயான் - 3 நிலவின் ஈர்ப்பு விசைக்குள் செலுத்தப்பட்டு கடந்த ஆகஸ்ட்  23 ஆம் தேதி மாலை நிலவின் தென் துருவத்தில் இறங்கி சாதனை படைத்தது. உலகில் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவிற்கு பிறகு நிலவில் கால் பதித்த நான்காவது நாடாக இந்தியா மாறியிருக்கிறது. அதிலும் குறிப்பாக, நிலவின் தென் துருவத்தில் கால் பதிக்கும் உலகின் முதல் நாடாக இந்தியா தன் சாதனையைப் பதிவு செய்துள்ளது.

 

இந்நிலையில் நிலவை ஆய்வு செய்யும் ஜப்பான் விண்கலமான ஸ்சிலிம் நாளை (07.09.23) விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இந்திய நேரப்படி நாளை காலை 04.40 மணிக்கு ஸ்சிலிம் விண்கலம் நிலவுக்கு அனுப்பப்பட உள்ளதாக ஜப்பானின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஜாக்‌ஷா (JAXA) தெரிவித்துள்ளது. இந்த திட்டம் வெற்றியடைந்தால் நிலவில் தடம் பதிக்கும் 5 வது நாடு என்ற பெருமையை ஜப்பான் பெறும். ஏற்கெனவே இரண்டு முறை இந்த விண்கலம் விண்ணில் செலுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டு மோசமான வானிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்