இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண தன்னால் முடிந்த முயற்சிகளைச் செய்ததாக அந்நாட்டின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
இலங்கை நாடாளுமன்றம் இன்று (16/07/2022) கூடிய நிலையில், அதிபர் பதவியில் இருந்து விலகும் கோத்தபய ராஜபக்சேவின் கடிதத்தை நாடாளுமன்றச் செயலாளர் தம்மிகா தசநாயகே வாசித்தார். நாட்டின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண தன்னால் முடிந்த பணிகளை செய்ததாகவும், எனினும் சூழல் கருதி பதவி விலகுவதாகவும் கடிதத்தில் கோத்தபய ராஜபக்சே குறிப்பிட்டுள்ளார்.
கடிதத்தை வசித்த செயலாளர், இதன் மூலம் அதிபர் பதவி காலியாக இருக்கிறது. வரும் ஜூலை 19- ஆம் தேதி அன்று காலை 10.00 மணிக்குள் அதிபர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். ஒருவருக்கு மேல் விண்ணப்பித்தால் வரும் ஜூலை 20- ஆம் தேதி அன்று நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.
கோத்தபய ராஜபக்சே பதவி விலகிய நிலையில், இலங்கையின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.