1923 -ஆம் ஆண்டு ஹென்றி லூஸ் மற்றும் பிரிட்டன் ஹடன் (Henry luce & briton hadden) ஆகியோரால் டைம் பத்திரிகை துவங்கப்பட்டது. இதன் முதல் பிரதி 1923 மார்ச் 3-ஆம் தேதி அன்று பிரசுரிக்கப் பட்டது. தற்போது இந்த நிறுவனம் சேல்ஸ்ஃபோர்ஸ் (Sales force) என்னும் தொழில்நுட்ப நிறுவனத்தின் இணை நிறுவனர் மார்க் பெணியோஃப் (Marc Benioff) என்பவருக்கு 190 மில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த விற்பனைக்கும் சேல்ஸ்ஃபோர்ஸ் நிறுவனத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று மார்க் பெணியோஃப் தெரிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பான பணப் பரிவர்த்தனை இன்னும் 30 நாட்களில் முடியும் என்றும் அந்நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் தற்போதுள்ள 'டைம்' தலைமை பத்திரிகையாளர் குழுவே செய்திகள் தொடர்பான விஷயங்களை கவனித்துக்கொள்ளும் என்றும் அறிவிப்பு வந்துள்ளது. 2013-ஆம் ஆண்டு இதேபோல் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையை அமேசான் நிறுவுனர் ஜெஃப் பிஸோஸ் 250 மில்லியன் அமெரிக்கா டாலர்களுக்கு வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.