Skip to main content

தாய் காண்டாமிருகத்தை கொம்புக்காக கொன்ற கும்பல்; பிரியமறுத்த குட்டி காண்டாமிருகம்

Published on 02/09/2018 | Edited on 02/09/2018

 

rhino

 

 

 

விலங்குகளின் ரோமம் மற்றும் கொம்புகளை வேட்டையாடி  கடத்தும் கும்பல் அரியவகை பெண் வெள்ளை காண்டாமிருகத்தை கொன்றதோடு அதன் குட்டி காண்டாமிருகத்தையும் தாக்கியுள்ளனர். ஆனால் அந்த குட்டி காண்டாமிருகமோ தாயின் பிரிவை தாங்கமுடியாமல் பூங்காவில் அலைந்து திரிந்து வருகிறது.

 

தென்னாப்பிரிக்காவில் குரூஜர் தேசிய பூங்கா அமைந்துள்ளது அங்கு உள்ள அரியவகை வெள்ளை நிற பெண்  காண்டாமிருகம் ஒன்று குட்டி ஒன்றை ஈன்றது அந்த குட்டிக்கு ஆர்தர் என்று பெயர்வைத்து செல்லமாக பார்த்துவந்தனர் பூங்கா நிர்வாகத்தினர். இப்படிபட்ட நிலையில் அந்த பெண் காண்டாமிருகம் சர்வதேச ரோமம் மாற்றும் காண்டாமிருக கொம்புகளை கடத்தும் கும்பலால் கொல்லப்பட்டது. அப்போது அருகில் இருந்த அந்த குட்டி காண்டாமிருகத்தையும் அந்த கும்பல் கோடரியால் தாக்கியுள்ளனர் அப்போது தாயை பிரியமுடியாமல் சுற்றிவந்துள்ளது. 

 

rhino

 

 

 

அந்த குட்டி காண்டாமிருகத்திற்கு கொம்பு முளைக்காததால் அதை தாக்கிவிட்டுமட்டும் சென்றுவிட்டனர். ஆனால் அம்மாவின் பிரிவை தாங்கமுடியாத ஆர்தர் அம்மா இறந்த இடத்தை சுற்றி சுற்றி வருவதாக  கம்பிரியா விலங்குகள் பூங்காவின் தலைமை செயல் அதிகாரி கேரன் புரூவர்கூறியுள்ளார். கொஞ்சநாட்கள் கழித்து இந்தநிலை மாறும் எனவும் கூறியுள்ளார். மேலும் அந்த குட்டி காண்டாமிருகம் தற்போது பூங்காவால் சிரத்தையுடன் பராமரிக்கப்பட்டுவருகிறது. 

சார்ந்த செய்திகள்

Next Story

தண்ணீர் தேடிச் செல்லும் வன விலங்குகள் பலியாகும் துயரம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Tragedy of wild animals lost life in search of water

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு பருவமழை பொய்த்துவிட்டதால் ஏரி, குளம், குட்டைகளில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. இதனால் கால்நடைகளுக்குத் தண்ணீர் கிடைக்கவில்லை. அதேபோல தமிழ்நாடு முழுவதும் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள காடுகளிலும் தண்ணீர் இன்றி மரங்கள் கருகி வருவதுடன் வனவிலங்குகளும் தண்ணீர் இன்றி தவித்து வருகிறது.

இதேபோல புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகமாக உள்ள வனப்பரப்புகள் மற்றும் கீரமங்கலம் மற்றும் சேந்தன்குடி, குளமங்கலம், மேற்பனைக்காடு, நெய்வத்தளி உள்ளிட்ட பல கிராமங்களில் வனத்துறைக்கு சொந்தமான காப்புக்காடுகளில் பல ஆண்டுகளுக்கு முன்பே பலமரக்காடுகள் அழிக்கப்பட்டு முந்திரி மற்றும் தைலமரக்காடுகளாக பராமரிக்கப்பட்டு வந்தது.

இதனால் பலமரக்காடுகளில் இருந்த முயல், மான், மயில்கள், குருவிகள், பறவைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. தற்போது தைலமரக்காடுகள் அழிக்கப்பட்டு முந்திரி மரக்காடுகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இதனால் இந்தக் காடுகளில் வன உயிரினங்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. மேலும் இந்தக் காடுகளில் உள்ள மான் போன்ற உயிரினங்கள் தண்ணீர் தேடி வெளியிடங்களுக்குச் செல்லும் போது நாய்களால் கடித்து குதறப்படுகிறது. அதேபோல தண்ணீர் தேடி சாலையைக் கடக்க முயலும்போது வாகனம் மோதி பலியாகிறது. இதேபோல புதுக்கோட்டை  மாவட்டத்தில் திருமயம், கீரமங்கலம் என மாவட்டம் முழுவதும் பல விபத்து சம்பவங்களில் மான்கள், மயில்கள் போன்ற உயிரினங்கள் பலியாகி வருகிறது. இதேபோல வியாழக்கிழமை கீரமங்கலம் பகுதியில் இருந்து தண்ணீர் தேடிச் சென்ற ஒரு மான் திசை மாறி பேராவூரணி பக்கம் சென்றுள்ளது. அந்த மானை பொதுமக்கள் பிடித்து வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

ஆகவே, கோடைக்காலம் தொடங்கிவிட்டதால் காடுகளில் சுற்றித்திரியும் பறவைகள், வன உயிரினங்களுக்கு இரையும், தண்ணீரும் கிடைக்காமல் தண்ணீர் தேடி கிராமங்களுக்குள் வரும் மயில், மான் போன்றவற்றை நாய்கள் கடிப்பதும், விபத்துகளில் சிக்கி பலியாவதும் தொடர்ந்து கொண்டிருப்பதால்  ஒவ்வொரு காட்டுப் பகுதியிலும் சில இடங்களில் கோடைக்காலம் முடியும் வரை தண்ணீர் தொட்டிகள் அமைத்து வன உயிரினங்களைப் பாதுகாக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்ணீர் கிடைக்காமல் இப்படி வெளியில் வந்து விபத்துகளில் சிக்கி பலியாகிறது. ஆகவே வனத்துறை தண்ணீர் தொட்டிகள் அமைக்க வேண்டும். கோடை வெயிலில் தாகத்தில் தவிக்கும் மக்களுக்கு ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைப்பது போல வன உயிரினங்களின் தாகம் தீர்க்கவும் உயிர் காக்கவும் தண்ணீர் தொட்டிகள் அமைக்க வேண்டும் என்கின்றனர் இளைஞர்களும் விவசாயிகளும்.

மேலும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு வனப்பகுதியில் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டது சில நாட்கள் தண்ணீர் வைக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு தண்ணீர் வைத்து பராமரிப்பு செய்யவில்லை. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் JJ வடிவத்தில் அமைக்கப்பட்ட தண்ணீர் தொட்டிகளில் கூட தண்ணீர் இல்லை. வனவிலங்குகளை காக்க தண்ணீர் தொட்டி அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story

ஒட்டகங்கள் சித்ரவதை; விலங்கு பண்ணையில் அதிகாரிகள் ஆய்வு

Published on 22/11/2023 | Edited on 22/11/2023

 

torture of camels; Officials inspect animal farm in Sulur

 

கோவையில் ஒட்டகம் உள்ளிட்ட விலங்குகளை அடைத்து வைத்து சித்ரவதை செய்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில் அங்கிருந்த பல்வேறு விலங்குகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

அண்மையில் சமூக வலைத்தளங்களில் ஒட்டகம் ஒன்றை சிலர் தாக்கி துன்புறுத்தும் காட்சி ஒன்று வைரலாகி இருந்தது. இந்த சம்பவம் கேரளாவில் நிகழ்ந்ததாக கூறப்பட்ட நிலையில் அது கோவையில் நிகழ்ந்த சம்பவம் என்பது தெரிய வந்தது. இது குறித்து விசாரணை மேற்கொண்டதில், கோவை சூலூரில் இயங்கி வந்த சங்கமித்ரா என்ற விலங்கு பண்ணையில் இந்த கொடுமை நிகழ்ந்தது தெரிய வந்தது.

 

அந்த விலங்கு பண்ணையில் சட்டவிரோதமாக விலங்குகள் அடைத்து வைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்தது. உடனடியாக விலங்கு நல வாரியம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் நேரடியாக சென்று ஆய்வு செய்தனர். பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு காட்சிப்பொருளாக பயன்படுத்த ஒட்டகம் உள்ளிட்ட விலங்குகளை உரிய அனுமதி இல்லாமல் அடைத்து வைத்ததாக தெரியவந்தது. இந்த சோதனையில் ஐந்து ஒட்டகங்கள், நான்கு குதிரைகள், இரண்டு கழுதை உள்ளிட்ட அனைத்து விலங்குகளையும் கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் விலங்கு நல வாரிய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மீட்கப்பட்ட ஒட்டகங்கள் சென்னை கொண்டுவரப்பட்டுள்ளது. இதனை சட்டவிரோதமாக நடத்தி வந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் தயாராகி வருகின்றனர்.