பல்வேறு இந்திய வங்கிகளிடம் இருந்து தொழிலதிபர் விஜய் மல்லையா 9000 கோடிக்கு வாங்கிவிட்டு அதை திருப்பி கட்டாமல், லண்டனில் தஞ்சமடைந்தார். இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட வங்கிகள் சார்பில் லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டது. அப்போது இந்திய தரப்பு சார்பில், விஜய் மல்லையா நாடு கடத்தப்பட்டால் மும்பை சிறையில்தான் அடைக்கப்படுவார் என்று தெரிவிக்க லண்டன் நீதிமன்றம் மும்பை சிறையின் வசதிகள் குறித்த வீடியோவை சமர்ப்பிக்க உத்தரவிட்டு மல்லையாவிற்கு செப்டெம்பர் 12-ஆம் தேதி வரை ஜாமின் வழங்கியது.
அதேபோல் மும்பை சிறையின் வீடியோவும் சமர்ப்பிக்கப்பட்டது. இந்நிலையில் ஓவலில் இந்தியா-இங்கிலாந்து 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியது. இந்த போட்டியை காண மல்லையா ஓவல் மைதானத்திற்கு நேரில் வந்தார். அவரை ஏ.என்.ஐ செய்தியாளர் படம்பிடிக்க மைதானத்தை விட்டு வெளியேறும் பொழுது இந்தியா வருவது குறித்த கேள்விக்கு நான் கிரிக்கெட் காணவரும் இடங்களில் செய்தியாளர்களை சந்தித்து பதில் சொல்வதில்லை நான் இந்தியா வருவதை நீதிபதிகள்தான் முடிவு செய்வார்கள் எனக்கூறி சொகுசு காரில் ஏறி டாட்டா காட்டினார் மல்லையா.