நவீனம், தொழில்நுட்பம் என்ற பெயரில் அனைத்துமே உச்சக்கட்ட மாறுதல்களைச் சந்தித்து வருகிறது. அந்த வகையில் 30 ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீரானது பாட்டில்களில் அடைத்து வைக்கப்பட்டு விற்பனைக்கு வருவதெல்லாம் சாத்தியமா? என்ற கேள்வி எழுந்த நிலையில், அதுவும் சாத்தியத்தில் முடிந்தது. தற்போது அதையும் தாண்டி உணவு டெலிவரி, ஆட்டோ, டாக்ஸி என அனைத்துமே ஆன்லைன் வசமாகி வருகிறது.
இப்படி எத்தனையோ எதிர்பார்த்திருக்க முடியாத மாறுதல்களைக் கூட தொழில்நுட்பம் சாத்தியமாக்கி வருகிற நிலையில் சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் நான்கு கண்டங்களைத் தாண்டி உணவு டெலிவரி செய்துள்ளது பேசு பொருளாகி இருக்கிறது. சென்னையைச் சேர்ந்த மானசா என்ற பெண் சிங்கப்பூரிலிருந்து அண்டார்டிகாவிற்கு உணவு டெலிவரி செய்துள்ளார். ஆர்டர் செய்தவரிடம் உணவைக் கொண்டு சேர்க்க நான்கு கண்டங்களைத் தாண்டி 30 ஆயிரம் கிலோமீட்டர் பயணித்துள்ளாராம் மானசா.