Published on 03/08/2019 | Edited on 04/08/2019
அமெரிக்காவில் உள்ள எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தை விட உயரமான விண்கல் ஒன்று வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி பூமியை கடக்க உள்ளது.
பொதுவாக சிறிய அளவிலான விண்கற்கள் பூமியை கடப்பது சாதாரணமான நிகழ்வே. ஆனால் அளவில் மிகப்பெரிதாக உள்ள இந்த விண்கல் பூமியை கடப்பது, பல ஆராய்ச்சியாளர்களின் ஆர்வத்தையும் தூண்டியுள்ளது. கியூகியூ23 (QQ23) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கல் 1870 அடி விட்டதை கொண்டது. அமெரிக்காவில் உள்ள எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் உயரமே 1454 அடிதான் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பூமியில் இருந்து சுமார் 7 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த விண்கல் இன்னும் ஒருவார காலத்தில் பூமியை நெருங்கி, வரும் 10 ஆம் தேதி பூமியை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.