இந்திய மதிப்பில் ரூ.23 கோடி ரூபாய் மதிப்புள்ள மீனை பிடித்த குழுவினர் அதனை மீண்டும் கடலிலேயே விட்டுள்ளனர்.
அட்லாண்டிக் கடலில் மீன்களின் வளத்தைப் பெருக்க மீன்களைப் பிடித்து அதனை கடலின் வேறு பகுதியில் மீண்டும் விடுவதற்கு சில குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. அப்படி, அயர்லாந்து கடற்பரப்பில் வெஸ்ட் கார்க் பகுதியைச் சேர்ந்த டாவ் எட்வர்ட்ஸ் என்பவரின் தூண்டிலில் சூறை மீன் ஒன்று சிக்கியுள்ளது. சுமார் 8.5 அடி நீளமும், 270 கிலோ எடை உடைய இந்த மீனின் மதிப்பு இந்திய ரூபாயில் ரூ.23 கோடி ஆகும்.
இவ்வளவு விலைமதிப்பு மிக்க அரியவகை மீன் தங்கள் தூண்டிலில் மாட்டியும், தங்கள் வணிக ரீதியாக மீன்களைப் பிடிக்கவில்லை என்றும், மீன் வளத்தை பெருக்கவே தாங்கள் இவ்வாறு செய்வதாகவும் கூறிய அந்த குழுவினர், அந்த மீனை மீண்டும் கடலுக்குள்ளேயே விட்டுள்ளனர். பணத்திற்காக அந்த மீனை கொல்லாமல் மீண்டும் கடலுக்குள்ளேயே விட்ட அந்த குழுவினரை பலரும் பாராட்டி வருகின்றனர்.