Published on 09/07/2019 | Edited on 09/07/2019
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில், அந்நாட்டு நேரப்படி நேற்று காலை திடீரென கனமழை கொட்டி தீர்த்தது.
ஒரு மாதம் பெய்ய வேண்டிய மழையின் அளவு சுமார் ஒரு மணி நேரத்தில் பெய்ததால் சாலைகள் முழுவதும் நீருக்குள் மூழ்கின. தாழ்வான பல பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. சாலையில் நிறுத்தப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான வாகனங்கள் மழை நீர் புகுந்து நாசமானது. இப்படி வாஷிங்டன் முழுவதும் கடும் பாதிப்புகளை உண்டாக்கிய இந்த மழை அமெரிக்க அதிபர் மாளிகையையும் விட்டுவைக்கவில்லை.
இந்த மழை காரணமாக அமெரிக்காவின் கீழ் தளத்தில் நீர் நுழைந்துள்ளது. இதன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வெள்ளத்தால் மக்கள் பல இடங்களில் வெளியே வர முடியாமல் சிக்கியுள்ள நிலையில் அவர்கள் அனைவரையும் படகுகள் வைத்து மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன.