தகவல் திருட்டு என்பது தற்போதைய இன்டர்நெட் உலகில் அதிகரித்து வருகிறது. கூகுள், ஃபேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்களின் தகவல் திருடப்பட்டதற்காக விசாரணைகளும் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் ஃபேஸ்புக் தளத்திலிருந்து 12 நாட்களில் 6.8 மில்லியன் பேரின் தனிப்பட்ட போட்டோக்கள் திருடப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஃபன் ஆப், ஃபன் கேம் என நாம் கிளிக் செய்யும் போது அதன் மூலமாகவே இது திருடப்பட்டுள்ளது என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. 876 பேர் உருவாக்கிய சுமார் 1500 ஃபன் ஆப்கள் மூலமாகவே இந்த 6.8 மில்லியன் போட்டோக்கள் திருடப்பட்டுள்ளன. இந்த திருட்டால் உங்களது கணக்கு பாதிக்கப்பட்டிருந்தால் ஃபேஸ்புக் ஹெல்ப் சென்டர்க்கு பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வரும் எனவும், பாதிக்கப்படாத கணக்குகளுக்கு இந்த நோட்டிபிகேஷன் வராது எனவும் ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த முறை மூலம் உங்களது புகைப்படங்கள் திருடப்பட்டுள்ளதா என நீங்கள் தெரிந்துகொள்ளலாம். மேலும் ஃபேஸ்புக்கில் ஃபன் ஆப் மற்றும் ஃபன் கேம் விளையாடும்போது கவனம் தேவை என ஃபேஸ்புக் நிர்வாகம் பயனாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.