உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 21 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 400-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 13,000க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
கரோனா தொடர்பாக தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் அதிகம் பரப்பப்பட்டு வருகின்றது. இதைத்தொடர்ந்து, தற்போது பேஸ்புக் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், "ஆயிரக்கணக்கான கரோனா தொடர்பான தகவல்களை நாங்கள் பேஸ்புக்கில் இருந்து நீக்கியுள்ளோம். தொடர்ந்து தவறான தகவல் பரப்பப்படுகிறது, சில நிமிடங்களிலேயே அவை பலரால் அவை ஷேர் செய்யப்படுகின்றது. தற்போது தவறான தகவல்களை ஷேர் செய்பவர்களுக்கும் எச்சரிக்கை அனுப்ப முடிவு செய்துள்ளோம். விரைவில் அவர்களுக்கு எச்சரிக்கை அனுப்புவதன் மூலம் தவறான தகவல் ஊடகங்களில் பரவுவது தடுக்கப்படும்" என்று பேஸ்புக் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள்.